12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு – 21 வயது இளைஞன் கைது!

<!–

12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு – 21 வயது இளைஞன் கைது! – Athavan News

ஹப்புத்தளை – கொஸ்லாந்தை – கெலிப்பனவளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் குறித்த சிறுமி சுடப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்லந்த பொலிஸார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply