யாழில் 11 வயதுடைய மாணவன் டெங்குவால் உயிரிழப்பு!

<!–

யாழில் 11 வயதுடைய மாணவன் டெங்குவால் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Reply