களனி பல்கலைக்கழக மோதலில் இரு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலொன்றில் மாணவர்கள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply