தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்

<!–

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம் – Athavan News

தோட்டத் துறையில் பணிபுரியும் 115,867 பயனாளி குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியது.

‘பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார தடைகளை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்’ என்ற நிதி அமைச்சரின் யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சர் தலைமையிலான குழுவொன்று தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கான கோதுமை மா நிவாரணம் தொடர்பான தீர்மானத்தை பரிசீலித்து பரிந்துரையை வழங்கிய நிலையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply