
இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அவருக்கு பதிலாக இன்றைய தினம் ஜெப்ரி வெண்டர்சே விளையாடவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.





