அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்றிச்செல்லப்பட்ட கனரக வாகனங்கள்! தடையை மீறி இறக்குமதியா?

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரண்டு Cadillac Escalade சொகுசு கார்களை கனரக வாகனம் ஒன்று ஏற்றிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் வாகன இறக்குமதிக்கான தடையை மீறி எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாகனங்கள் கடுவெலயில் உள்ள முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply