சரத் பொன்சேகாவை தாக்க முயற்சித்த சமல் எம்பி! – திஸ்ஸ குட்டியாராச்சி தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை, அமைச்சர் சமல் ராஜபக்ஷ தாக்க முயற்சித்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளாா்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் விகாராதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அந்த சந்தர்ப்பத்தில் தான் உள்ளிட்ட சிலர் இடையில் சென்று அவரை காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

அன்று தப்பியோடிய சரத் பொன்சேகா இன்று வீரரைபோன்று கருத்து வெளியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply