
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்து, கைது செய்யப்பட்ட ஷெஹான் மாலக கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக கமகே மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நேற்று பாணந்துறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷெஹான் மாலக்க கடந்த ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்று கூறியதாகவும், அது குறித்து விசாரணை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா! அமைச்சரவை அனுமதி





