அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வு;

மன்னாரில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே அவுத்திரேலிய நிறுவனத்தால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகிறது என மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம் எனும் அமைப்பினர் குற்றம் சாடியுள்ளனர்.
மன்னார் பிரிஜின் லங்கா நிறுவன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
அந்த அமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது:
மன்னாரில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக கனிய மணல் ஆய்வுகள் மிகவும் ரகசியமான முறையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனிய மணல் அகழ்வால் மன்னார் தீவுப் பகுதி குறுகிய காலத்தில் முற்று முழுதாக கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். எங்களால் இயன்றவரை இது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் எமது ஆதங்கத்தை தெரியப்படுத்தியும் அவுஸ்திரேலிய நிறுவனம் இதை ஆய்வு செய்வதில் தொடர்ந்தும் முனைப்புக் காட்டி வருகிறது. இந்த ஆய்வுக்கு புவிச்சரிதவியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற அரச உயர் அதிகாரிகள் இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று கைவிரிக்கின்றனர். உயர் அதிகாரிகளையும், அரசியல் செல்வாக்குள்ளவர்களையும் கருவிகளாக பாவித்தே குறித்த நிறுவனம் இந்த உரிமங்களைப் பெற்று கனிய மணல் அகழ்வைத் தொடர்ந்துள்ளது என நாம் அறிகின்றோம் என்றனர்.

Leave a Reply