மோட்டார்சைக்கிள்-முச்சக்கரவண்டியுடன் மோதி இருவர் காயம் ;

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தன்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியும் சங்கானை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply