உள்ளூராட்சி சபைகளின் சேவை வழங்கல் குறித்து செயலமர்வு

உள்ளுராட்சி சபைகளின் சேவை வழங்கல் குறித்து பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிதல் தொடர்பிலான செயலமர்வு மூதூர் பிரதேச சபை பிரிவில் உள்ள தோப்பூர் பொதுநூலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்றது.

தோப்பூர் பிரதேசத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட சமூக பிரதிநிதிகளுக்கு “இளைஞர் அபிவிருத்தி அகம்” நிறுவனம் இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இச்செயலமர்வில் பிரதேச சபைகளினால் மேற்கொள்ளடும் திண்மக்கழிவு முகாமைத்துவமும் அதனால் ஏற்படும் தடைகள், உள்ளூராட்சி சபைகளினால் மேற்கொள்ளப்படும் உட்கட்டுமானப் பணிகள், சூழல் மாசடைதலை தடுக்க பிரதேச சபைகளால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், பொதுமக்களின் பங்கேற்புடனான பாதீடு தயாரித்தல், பிரதேச சபைகளுக்கான வருமான ஈட்டும் வழிமுறைகள், பொதுமக்களுக்குள்ள கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக பா.சிவப்பிரகாசம் ,திரு.காண்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்தியசோதி, மூதூர் பிரதேச உறுப்பினர்கள்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ், ஏ.எஸ்.றிபாஸ், திருமதி. ஜெஸீலா குஸைன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply