திருகோணமலை பகுதிகளில் யூரியா பசளையின்மையால் விவசாயிகள் அவதி

திருகோணமலை – கிளிவெட்டி கமநல சேவை நிலையப் பிரிவில் உள்ள பகுதிகளில் செய்கைப்பண்ணப்பட்ட வேளாண்மைகள் , யூரியா பசளையில்லாமையால் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் ,விளைச்சல் குறைவடைந்து காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சேதனப்பசளையை நம்பி செய்த சுமார் 2000 ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் பசுமை விவசாயம் என்று சொல்லி எம்மை பாதாளத்தில் தள்ளியுள்ளது.

அத்தோடு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நைட்ரஜன் திரவ உரம் உரிய நேரத்திற்கு வழங்கப்படவில்லை.அதனை வயலுக்கு அடித்தால் ஊரில் உள்ள எல்லா நாய்களும் வயலுக்குள் வருகின்றது.அரசாங்கம் மானியம் தருவதாக தெரிவிக்கிறது.

அதற்கு பதிலாக யூரியாவை தந்தால் வேளாண்மை சிறப்பாக வளரும்.நைட்ரஜன் எண்ணெய் சரியான துர்நாற்றமாக இருப்பதோடு உடம்பெல்லாம் கடிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.விவசாயத்திற்கு செய்த கடனை அடைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் தற்போது விவசாயத்தில் கைவத்துள்ளது.இதன் பின்புலம் என்னவென்று தெரியாமல் உள்ளது.

தமக்கு வேறு தொழிலும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இன்று ஒருவிலை நாளை ஒருவிலையென பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படுகின்றது.

அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அக்கரைகொண்டு யூரியா பசளையை தந்துதவ வேண்டுமென கிளிவெட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply