வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் முத்தேர் இரத்தோற்சவம் இன்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியினை கருத்தில் கொண்டும் இடம்பெற்றது.
கருவறையில் அருள் பாலித்து விளங்கும் வல்லிபுரத்தாழ்வார் மற்றும் வசந்தமண்டவத்தில் இருந்து அருள்பாலிக்கும் விநாயகர், ஸ்ரீ வல்லிபுரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கான விசேட அபிசேக ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.
வசந்தமண்டவத்தில் இருந்து எழுந்தருளிய வல்லிபுரத்தாழ்வார் உள்ளிட்ட சமேதரக தெய்வங்கள் பீடத்தில் உள்ளவீதியுடாக வலம் வந்து வெளியில் முத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சுதர்சன ஈஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
இவ் ஆலயத்தின் திருவிழா கடந்த 01.02 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா 17 நாட்கள் நடைபெறும். 15வது திருவிழாவான இன்று முத்தேர் இரதோற்சவ திருவிழா இடம்பெற்றது.
பலபாகங்களில் இருந்து வருகைதரும் பக்தர்கள் வல்லிபுரத்தாழ்வாரின் இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.








