சமுர்த்திப் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கி வைப்பு ;

ஐனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கம் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானிய தொகை வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானிய தொகை வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம் அல் அமீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பிரத்தியேக செயலாளர் ஏ.ஏ.நாஸர், ஓட்டமாவடி இணைப்பாளர் பி.எம்.எம்.காசிம், உதவித் திடடமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.நியாஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி வி.பி.சிறியரத்ன, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 4,769 சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானிய தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply