
கொழும்பு, பெப் 15: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து (IOC) 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, செவ்வாய்க்கிழமை கையளித்தார்.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில்
“இந்தியா, இலங்கையின் உறுதியான பங்காளி, உண்மையான நண்பன். இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை கையளித்தார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்தியா-இலங்கை கூட்டாண்மை தொடர்ந்து செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த ‘ஸ்வர்ணா புஷ்ப்’ என்ற எண்ணெய் டேங்கர் மூலம் இந்த எரிபொருள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.





