மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

கொழும்பு, பெப் 15: சுற்றுச் சூழல் நன்மைக்காக மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மூத்த அதிகாரி கூறியது: கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், கடந்த 2000 ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாக இலங்கையில் தற்போது உள்ளன. தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் இலங்கையில் உள்ளன.
மேலும், அதிகரிக்கும் வருமானம், தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக தனியார் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தும் போக்கு உள்ளது.

இந்த மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதைக் குறைக்கும் வகையில் மோட்டார் அல்லாத வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில்,
தற்போதுள்ள சாலைகளுக்கு ஏற்ற சைக்கிள் பாதைகளைக் குறித்தல், தற்போதுள்ள பாதசாரி பாதைகளை மேம்படுத்துதல், எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சாலைகளில் சைக்கிள், பாதசாரி பாதைகளை அமைத்தல், அரசு அலுவலக ஊழியர்களுக்கு சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், அலுவலகங்களில் சைக்கிள் பார்க்கிங் உள்ளிட்ட வாதிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி இந்த வசதிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார் அவர்.

Leave a Reply