மூன்று மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது – முக்கிய அறிவிப்பு

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், புதன்கிழமை முதல் ஹைட்ரோ மின் உற்பத்தி 50% குறைக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய முறையானது எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply