
தென்மராட்சியில் இரண்டு நபர்களுக்கு கொரோனா, டெங்கு நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞருக்கும், சரசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்புக்குள்ளான இருவரும் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனல்.
அவர்கள் இருவரும் அன்டிஜன் மற்றும் டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இருவருக்கும் இரண்டு நோய்த் தாக்கங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சியிலேயே டெங்குப் பாதிப்பு அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





