எரிகாயங்களுக்குள்ளான நிலையில் பெண் சடலமாக மீட்பு

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நெய்னா மரிக்கார் நுஸ்ரத் ஜஹான் என்ற 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் சில நாட்களாக சண்டை இடம்பெற்று வந்துள்ள நிலையில், நேற்று இரவும் இவ்வாறு இருவருக்குமிடையில் சண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸ் பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டில் இரத்தக்கரைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை இரண்டாவது கணவர் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply