
கோட்டாபய ராஜபக்சவே உங்களை நம்பிய மக்களுக்கு நீங்களே தான் பதில் கூறவேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
எமது கூட்டங்களுக்கு வந்து முட்டைகளை வீசி தாக்கினார்கள். பின்னர் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அடுத்ததாக நாளை யாரைத் தாக்கப் போகின்றார்கள்? இந்த நிலைதான் வரலாற்றில் லசந்த விக்கரமதுங்கவுக்கும் நடந்தது. உப்பாலி தென்னகோனுக்கு நடந்ததும் இதுவே தான். பூதல ஜயந்தவிற்கு நடந்ததும் இதுவே தான். இன்னும் பின்னால் சென்றால் ரிச்சர்ட் சொய்சாவுக்கு நடந்ததும் இதுவே தான்.
தற்பொழுது இந்த அரசாங்கம், மக்கள் மத்தியில் இவர்களுடைய பலம் குறைந்து வரும் பொழுது ஜனநாயக உரிமைகளுக்காகப் பேசுவதற்கு, புரட்சி செய்வதற்கு வாய் திறக்கும் ஊடகவியலாளர்களின், சிவில் செயற்பாட்டாளர்களின், மக்களின் வாய்களை அடக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது சிவில் செயற்பாட்டாளர் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள்.
அடுத்ததாக சமுத்திதவின் வீட்டிற்குத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் நோக்கம் என்ன? இதனை தான் நாம் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்கின்றோம். அவர்களுக்கு வேண்டுமானவற்றை எல்லாம் சொல்லமுடியும். அவர்களுக்கு வேண்டாதபொழுதும் தாக்குதல் நடத்துவதா பதில்.
இதற்கு வேறு நபர்களைக் குற்றம் சாட்டி பயனில்லை. கோட்டாபய ராஜபக்சவே உங்களை நம்பிய மக்களுக்கு நீங்களே தான் பதில் கூறவேண்டும். வேறு வேறு காரணங்களைக் கூறி வேறுவிதமான புதிய கதைகளை உருவாக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.





