கசிப்பு கோட்டை முற்றுகை..! ஜவர் அதிரடியாக கைது..! samugammedia

இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்கள்  பொலிசாரல் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் பொலிசாக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கசிப்பு 120  லீற்றர்,  1685 கோடாவும் பொலிசாரால்  மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும், மோட்டார் சைக்கிளும் பொலிசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை  நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply