திருகோணமலையில் வீடொன்று உடைக்கப்பட்டு தீ வைப்பு! samugammedia

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (23)மாலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply