காரைநகரில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு! samugammedia

இன்று மாலை காரைநகர் மடத்துக்கரை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் கறுப்பு ஜூலை நினைவுந்தல் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி – காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது பொதுச் சுடரினை, இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்றி வைத்தார்.


உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை – காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளருமான திரு.பாலச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply