மெனிங் சந்தை செயற்பாடுகள் வழமைக்கு…!samugammedia

பேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் இன்றைய தினம் வழமைப்போல் இடம்பெற்று வருகின்றன.

மெனிங் சந்தையில் உள்ள விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சுமத்தி நேற்றைய தினம் மெனிங் சந்தை தொழிற்சங்கத்தால், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் சந்தை செயற்பாடுகள் நேற்று முற்றிலும் முடங்கியிருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், அங்கு 17 பேர் கைது செய்யப்பட்டு, நேற்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply