சர்வதேசமே எமக்காக குரல் கொடு..!கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முல்லையில் அணிதிரண்ட மக்கள்..! கவனயீர்ப்பு பேரணி சற்றுமுன் ஆரம்பம்..!samugammedia

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் முல்லைத்தீவில் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமான  கவனயீர்ப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில்  குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்ததுடன் தற்போது ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply