வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே  நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும்  கொம்மந்தறை பகுதியில் உள்ள  நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply