மரணத்தின் பின்னரான பி.சி.எ.ர் பரிசோதனைகள் கட்டாயமில்லை – புதிய அறிவிப்பு

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேவைப்படுமாயின் சட்ட வைத்தியரின் விருப்பத்துடன், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply