இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கூடுவாஞ்சேரியில் கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய்க்கு மகள் கோவில் கட்டியுள்ளார்.
தமிழ்நாடு டிபன்ஸ் காலணியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், அண்ணா பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது தாய் கன்னியம்மாள் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
சிறுவயதிலேயே தந்தை வீட்டை விட்டு சென்ற நிலையில், பல இடங்களில் கூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்துள்ளார்.

இதனால் தாய் மீடு அதீத பாசம் வைத்த லட்சுமி, திருமணம் செய்து கொண்டால் அவரை பிரிய நேரிடும் என்று எண்ணி திருமணமே செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம், ஓய்வூதியப் பணம் ஆகியவற்றைக் கொண்டு தனது தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது மகள் ரூ.20 லட்சம் (இந்திய மதிப்பில்) செலவில் கோவில் எழுப்பியுள்ளார்.





