பழங்குடி சமூகமாக மாறிக்கொண்டு இருக்கின்றோம்- நாமல்

இளைஞர்களின் தாக்குதலினால் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இசை நிகழ்ச்சியொன்று நிறுத்தப்பட்டதன் ஊடாக கழகம் பழங்குடியினராக மாறி வருவதை காட்டுவதாகவும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலபிட்டிய பகுதியில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

நாம் அண்மைக் காலமாக கேட்கும் செய்திகள் ஊடாக நாடு எங்கே போகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை கொரோனா காலத்தில் இளைஞர்கள் மதத்துடனான தொடர்பை இழந்துள்ளனர்.

ஆகவே நம்பிக்கையான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் மக்கள் வளரவில்லை என்றால் பலகோடி ரூபாய் செலவழிப்பதில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply