2021 (2022) க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி இரண்டு முறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை 17 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலியான ‘DOE’ க்கு பிரவேசித்த விண்ணப்பத்தை இணைய வழியாக சமர்ப்பிக்கும் முன் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்குமாறு ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.





