தமிழர்களின் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்…! மேர்வினுக்கு சிறீதரன் பதிலடி..!samugammedia

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என முன்னாள் அமைச்சர்  மேர்வின் சில்வா கருதுவதாகவும் இது பலிக்காது எனவும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலையை எடுப்பேன் என களனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் அவரது உரைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என முன்னாள் அமைச்சர்  மேர்வின் சில்வா கருதுவதாகவும் இது பலிக்காது எனவும்  சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த 1985 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய செவ்வியொன்றில், ‘நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது என்று கூறினார்.

ஆகவே மீண்டும் ஆயுதங்களை எங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென மேர்வின் சில்வா போல, சரத் வீரசேகர போல, விமல் வீரவன்ச போல ஆட்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.

அவர்கள் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply