PAC இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டம்.
உளவியல் ஆலோசனை மய்யம்(PAC), மற்றும் Protecting Environment and Children Everywhere (PEaCE) அமைப்பும் இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று இடம்பெற்றது.
மட்/ மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சுரண்டல், இளவயது திருமணம் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தை இன்றைய தினம் (16/02/2022) சிறப்பாக நடாத்தப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு செயற்திட்டமானது காலை 8:00 மணிமுதல் மதிய உணவுடன் மாலை 4:00 மணிவரை நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை நடாத்த வேண்டுகோள் விடுத்ததுடன், மாணவர்களை ஒருங்கிணைத்து தந்த மாணவர்கள் மீதும் எதிர்கால சமூகம் மீதும் பற்றுக் கொண்ட அதிபர், மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் PAC குழுமம் நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் PAC மற்றும் PEACE அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை வழங்கி இருந்தனர்.

