
கொழும்பு, பெப் 17: கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மேலும் 1,217 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை, 596,042 பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும்,நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19,875 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,899 ஆக அதிகரித்துள்ளது.





