மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம்: PUCSL முடிவு

கொழும்பு, பெப் 17: மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது அவர்களின் மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என PUCSL இன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார நுகர்வோரிடமிருந்து செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ரூ. 44 பில்லியனை விட அதிகம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply