ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம்: 26 வாக்கு மூலங்கள் பதிவு

கொழும்பு, பெப் 17: மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 26 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறுகையில் “தாக்குதல் நடத்தியவர்கள் வந்த வேன், பைக்கை அடையாளம் காண 80 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். சில காட்சிகளை மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சம்பவங்கள் தொடர்பான விபரங்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த பொலிசார், தொலைத்தொடர்பு கோபுரங்களின் சமிக்ஞைகளை கண்காணிப்பதற்கான உத்தரவையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply