நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டமொன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2ம் திகதி இந்தத் திட்டம் கையளிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசேட சந்திப்பொன்று நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்களான விமல் வீரவங்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகிறது.

டொலர் தட்டுப்பாடு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் ஆகியனவற்றிற்கான தீர்வுகள் அந்த யோசனைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply