<!–
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழுஇ மாற்று நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






