நிகழாண்டில் 25 சுற்றுலா கிராமங்கள் அமைக்க முடிவு

கொழும்பு, பெப் 17:

நிகழாண்டில் நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” நிகழாண்டில், குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஒவ்வொரு கிராமத்துக்கும், ரூ. 10 மில்லியன் செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply