வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலையேற்றம்: எரிசக்தி அமைச்சர்

கொழும்பு, பெப் 17: எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால், இலங்கை வரலாற்றில் மிக அதிக விலையேற்றமாக அது இருக்கும் என்று எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரியுள்ளது. இது நியாயமான கோரிக்கையாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பாக நிதியமைச்சகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை. எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் பெட்ரோலை ரூ. 192 ஆகவும், ஒரு லிட்டர் டீசலை ரூ. 169 ஆகவும் அதிகரிக்க அவர்கள் கோரியுள்ளனர். அவர்கள், கோரியபடி எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால், இலங்கை வரலாற்றில் மிக அதிக விலையேற்றமாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply