
திருகோணமலை, பெப்.17:
திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராட சென்ற 3 இளைஞர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் பட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மற்றைய நபரை தேடும் முயற்சியில் கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு நீராட சென்ற நிலையில், அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போயிருந்தவர்களில் இருவரை பாதுகாப்பாக மீட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அவரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்டது.





