ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர்.அவர் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த மலையக மக்களுடன் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அதேவேளை எனக்கு கட்சி முக்கியமில்லை. எனது மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.