மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும்! ஆளுநர் ஜீவன்

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத் தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடமாகாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில், துறைசார் குழுக்களுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

வடமாகாண ஆளுநர் செயலகத்திறகு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.

சமைத்த உணவின் விலை, தொழில்முனைவோர், கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல், பண்ணை விலை மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை, விவசாயிகளுக்கான செலவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அத்தியாவசிய உள்ளீடுகளின் செலவுகள், விவசாய சேவைகள் துறை, வட மாகாண விவசாய அமைச்சகத்தின் திட்டங்கள், படகுகள் பழுது, நிதியுதவி, நங்கூரம், குளிர்பதனம், தொழில், திட்டங்கள் ஆகியவை குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply