மூதூர் கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி ஓரமாக கழிவுகள் போடப்படுவதால் இவ்வீதியால் பயணிக்கும் போது துர் நாற்றம் வீசுவதுடன் சூழலும் மாசுபடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது பலர் குப்பைகளை குப்பை இடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வளாகத்தினுள் போடாமல் வெளியே வீதி ஓரமாக போட்டு செல்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குப்பைகளை உரிய இடத்தில் போடுவதற்கும், துர்நாற்றம் வீசி வீதியால் பயணிப்போருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாமலும், சூழல் மாசடைவதை தடுப்பதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.









