மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பு!

<!–

மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பு! – Athavan News

இலங்கைக்கு மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாகவும் எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிகிறதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரம் 326 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்துள்ளனர் என்றும் அற்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 653 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply