
ஹொரணை – கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹொரண நீலக்க என்ற நபர், மாமியாரின் பொறுப்பில் இருந்த தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியின் கை-கால்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, தனது மகனை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





