களனிதிஸ்ஸவில் மின்சார உற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவு முற்றாக இடைநிறுத்தம்

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவு எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று மாலை முதல் குறித்த பிரிவின் மின் உற்பத்தி செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை தடை இன்றி முன்னெடுக்க மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என ஐக்கிய ஒன்றிணைந்த பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய ஒன்றிணைந்த பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித இதனை தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு தடை இன்றி மின்சாரத்தை வழங்குவதற்காகவே மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய ஒன்றிணைந்த பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தடையின்றி மின்விநியோகத்தை முன்னெடுக்க தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply