பாடசாலை மாணவர்களுக்குரிய பாடபுத்தகங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை! ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை மாணவர்களிற்கு வழங்கும் பாடபுத்தகங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நம் நாட்டில் அரச உத்தியோகத்தர்களிற்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது நன்கு அறிந்த விடயம்.

அவற்றில் பணிக்கொடை பணம் வழங்கப்படும், அத் தொகை முதலிலிருந்து தமக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்வர்.

ஆனால் இன்னும் பலரின் பணிக்கொடை பணம் வழங்கப்படவில்லை.

அதாவது கடந்த ஆண்டு 2021/12/31ம் திகதியில் இருந்து , 11 கோடி முதல் பணிக்கொடை பணம் வழங்கப்படாமல் காணப்படுவதாக தெரிவித்தார்.

ஆகவே, ஓய்வுபெற்ற அதிகாரிகளிற்கு இத‌ற்கான பணிக்கொடை பணம் வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியர், அதிபர் சம்பள போராட்டம் நடாத்தினோம், அப் போராட்டத்தின் போது எங்களுக்கு வழங்கப்பட்டது, சம்பளம் வழங்கல் குறித்து 2018 சம்பள அறிக்கை முறை நமக்கு வழங்கினர்.

அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து குழு ஒன்று அமைத்து இப் பிரச்சனை தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இதற்கு இன்று வரை எந்த குழுவும் அமைக்கவில்லை.

மேலும், மாணவர்களிற்கு வழங்கும் பாடபுத்தகங்கள். இப் புத்தகங்கள் சரியான முறையில் வழங்கப்பட்டு இல்லை. குறைவான புத்தங்களே அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எனவே இது குறித்து கவனம் தேவை என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply