பெரிய கல்லாறு வைத்தியசாலை கொவிட் சேவையில் இருந்து சாதாரண சேவைக்கு மாறுகிறது – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் dr. சுகுணன் இன்று களவிஜயம் மேற்கொண்டு அதிரடி அறிவிப்பு!

பெரிய கல்லாறு வைத்தியசாலை கொவிட் சேவையில் இருந்து சாதாரண சேவைக்கு மாறுகிறது –
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் dr. சுகுணன் இன்று களவிஜயம் மேற்கொண்டு அதிரடி அறிவிப்பு!

கொவிட் சிகிச்சை வைத்தியசாலையாக இயங்கி வந்த பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலை சாதாரண சிகிச்சை வைத்தியசாலையாக மாறுகிறது.

தற்போது கொவிட் தொற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைவைடைந்து உள்ளதாலும் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை நெற்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மவட்டத்தில் தற்போது கொவிட் தொற்றும் நோயாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்து உள்ளன. தற்போது 11 நோயாளர்கள் மாவட்டத்தில் உள்ளனர் ஒரு நோயாளர் மட்டுமே தற்போது பெரிய கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சிகிச்சை முடிந்து சென்றதும் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக வழமையான சிகிச்சை வைத்தியசாலையாக மாறும்.

பொது மக்கள் கொவிட் தொற்று குறைவடைந்துள்ளது என்பதற்காக அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளுடன் இருக்க வேண்டும் என்றார்.

இன்று பெரிய கல்லாறு வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையில் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் dr. மயூரன், மாவட்ட கொவிட் பிரிவு இணைப்பாளர் dr. அச்சுதன், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உட்பட விஜயம் செய்து கல்லாறு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி dr. மயூரேசன், எனைய வைத்தியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுபினர்களுடன் கலந்துரையாடி இந்த முவும் எடுக்கப்பட்டது.

Leave a Reply