வவுனியா குருமன்காட்டில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவிச்சக்கரவண்டியுடன் கப் ரக வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை கப் ரக வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் கொண்டு சென்ற வேளை குருமன்காடு புகையிரத கடவை பகுதியில் மீண்டும் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.







