நாட்டில் ஊடகவியலாளர்களை மிரட்டும் சம்பவங்கள் தொடர்கின்றது! திஸ்ஸ அத்தநாயக்க கவலை

நாட்டில் ஊடகவியலாளர்களை மிரட்டும் சம்பவங்கள் தொடந்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

கவலையான ஒரு விடயம் மீண்டும் ஊடகங்களின் மீதான தாக்கம் அதாவது சமுதித சமரவிக்ரம வீட்டில் ஏற்பட்ட தாக்குதல்.

இவ்வாறன பல சம்பவங்கள் தொடந்தும் நடந்து வருகிறன. அதாவது ஊடகவியலாளர்களை மிரட்டுவது போன்றவை நிகழ்கின்றன.

தற்போது அரசாங்கத்தின் சுயரூபம் தற்போது வெளி வருகிறது. ஏனெனில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்களை மிரட்டுவது போன்ற பல செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பத்திரிகைகளில், தொலைக்காட்சி செய்தியாளர்களில் நாட்டில் நிலை தெளிவாக காண்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக பேசப்படும் விடயங்களை துப்பாக்கி மூலம் கட்டுப்படுத்த முடியும் என நினைக்கின்றனர்.

நாட்டில் ஊடக சுதந்திரம் மிக அவசியம் எனவே ஊடகங்கள் பற்றியும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இத் தாக்குதல் குறித்து அரசாங்கம் சம்பந்தம் இல்லை என்றால் இத்தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிக மோசமான நிலையில் நாடு செல்கிறது என நான் நேற்று இணையதளங்களிலூடாக பார்வையிட்டேன்.

ஏனெனில் நாட்டில் உணவு மற்றும் விவசாயிம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் போசனை குறைவான பிள்ளைகள் காணப்படுவார்கள், ஏனெனில் இங்கு அரிசியின் விலை அதிகரித்து உள்ளது.

அதேபோல விலைவாசி உயர்வும், எனவே மக்கள் இரண்டு வேளை மாத்திரமே சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டும்

ஆகவே, விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் குறித்து ஒழுங்கான முடிவை எடுங்கள் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply